யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக ஊழியர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)

849

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக ஊழியர்கள் பார்க் வீதியிலுள்ள வளாகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம் கோசங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

-பாஸ்கரன் கதீசன்-

11 1213 1415 16 17