வவுனியாவில் ஹர்தாலை ஏற்பாடு செய்த வர்த்தக சங்கத் தலைவர் உட்பட ஏழுபேர் கைதாகி 2 மணித்தியாலயத்தின் பின்னர் விடுதலை!!

528

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம் இன்று வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்மாறு நேற்றைய தினம் ஒலிபெருக்கியில் விளம்பரப்படுத்தியமைக்கு பொலிஸாரிடம் அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து இன்று பொலிஸார் அவரையும் ஏனைய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

இதன் போது வர்த்தகர் சங்க தலைவர் ரி.கே.இராசலிங்கம் மற்றும் வர்த்தக சங்க அலுவலக உத்தியோகத்தர் விக்டர், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட முற்சக்கரவண்டியின் ஓட்டுனர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது சட்டத்தரணிகள் அனைவரும் வர்த்தக சங்க தலைவர் மற்றும் ஏனையோருக்கும் சார்பாக தமது வாதங்களை முன்வைத்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

மேலும் வவுனியாவில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கையை புகைப்படம் பிடித்த ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் வவுனியா பொலிசாரால் கைதாகி இரு மணித்தியாலயத்தின் பின் இன்று விடுதலை செய்யபப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலைக்கு நீதி கோரி வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது. இதன் போது திருநாவற்குளம் பகுதியில் உள்ள பிரதான வீதியில் சிலர் ரயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினர்.

இதனை அப் பகுதிக்கு சென்ற பத்திரிகை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளர் மற்றும் அப் பகுதியால் வந்த மூன்று இளைஞர்கள் புகைப்படம் பிடித்ததாக தெரிவித்து அவர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம் ஆகியோர் பொலிசாருடன் தொடர்ந்து கதைத்ததையடுத்து இரு மணித்தியாலயத்தின் பின் அவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.

1213 14 15 11