வவுனியாவில் பெண்கள் சிறுமிகளுக்க எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சட்ட நீதி கோரி அமைதிவழிப் போராட்டம்(படங்கள், காணொளி)2ம் இணைப்பு!!

810

பெண்கள் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து வவுனியாவில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு துரிதமான சட்ட நீதி கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் பெண்கள் அமைப்புகள், பெண்கள் அமைப்புகளின் வலையமைப்பு மற்றும் பெண்களுக்காக பணியாற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்ததுடன் வாய்களை கறுப்பு துணிகளால் கட்டியவாறு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டோம், பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைகளுக்கு துரிதமான சட்ட நீதியை தா என்ற கோரிக்கைகளை அடங்கிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர். சுமார் 2 மணிநேரம் இடம்பெற்ற இவ் அமைதிப் போராட்டம் 10.45 மணியளவில் நிறைவுபெற்றறது.

-பாஸ்கரன் கதீசன்-

4

1 02 2 03  4 5 06 6 7 8 9 10