வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொதுச் சந்தையானது ஆடு மற்றும் மாடுகளின் வதிவிடமாக காணப்படுகிறது. இது சம்பந்தமாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஓமந்தை பொதுச் சந்தைக் கட்டிடம் நிகொட் திட்டத்தின் கீழ் 2010 ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் அக் கட்டடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் மாத்திரமே சந்தை இயங்கிய நிலையில் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளது.
இதனால், குறித்த கட்டிடம் பாழடைந்து செல்வதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை ஓமந்தைப் பகுதியில் மீன் வியாபரிகள் தமது வியாபரத்தை வீதியோரங்களிலேயே மேற்கொள்கின்றனர். இதனால் பயணிகளும் வியாபாரிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்ப்பாக உரியவர்கள் அக்கறை செலுத்தவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





