வவுனியா கண்டி வீதியில் விபத்து : 4 பேர் படுகாயம்!!(படங்கள்)

931

வவுனியா கண்டி வீதியில் இன்று (08.06.2015) 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து கண்டி வீதி தேக்கவத்தைப் பகுதியில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டபோது வேகமாக வந்த ஹயஸ் ரக வான் கட்டுப்பாட்டை இழந்து பேரூந்தின் பின்பக்கமாக மோதுண்டதுடன் அருகில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதும் மோதியது.

இவ் விபத்தில் ஹயஸ் ரக வான் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதுடன் முச்சகரவண்டியும் சேதங்களுக்கு உள்ளாகியது.

இவ் விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தர்ஷன்-

023 25 2621 22 23 0024 024 16 17