வவுனியா சிதம்பரபுரம் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சத்தியசீலன் என்ற 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் இன்று (09.06.2015) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிதம்பரபுரம் பகுதியில் வசித்துவரும் மேற்படி இளைஞன் நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளார். குளத்திற்கு அருகிலிருக்கும் மரத்திற்கு மேல் ஏறிக்குதித்து குளித்துள்ளசமயம் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு நண்பர்களினால் எடுத்தவரப்பட்ட நிலையில் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-






