
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜுமேரா கடற்கரைப் பகுதியில் மூன்று வயது சிறுவனை முறைகேடான முறையில் முத்தமிட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 49 வயதுடைய குறித்த இலங்கையர் சம்பவம் நடந்த வேளை தான் போதையில் இருந்ததாகவும் என்ன நடந்தது என்றே தெரியாது எனவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 9ம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.





