
உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம் 300 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக இன்று முற்பகல் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விமானமே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவது இது இரண்டாவது தடவையாகும். அத்துடன் பகல் வேளையில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணி, சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





