கடற்கரையில் இரு பெண்களுடன் ஆண் ஒருவர் உல்லாசம் : மூவரும் கைது!!

545

3 persons

அக்கரைப்பற்று பதுர்நகர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரும் குறித்த பெண்களும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த நபர்கள் உல்லாசமாக இருப்பதற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் 31 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடற்கரைப் பிரதேசத்தில் தவறான முறையில் நடந்து கொள்வதாக அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து அவ்விடத்திற்கு விரைந்து ரோந்து நடிவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆண் பெண்களை அழைத்துவந்து விபசார தொழிலில் ஈடுபட்டு வருவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மூவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.