வவுனியா மரக்காரம்பளை கிராமசேவையாளர் அலுவலகம் திறப்புவிழா!!(படங்கள்)

572

வவுனியா மரக்காரம்பளை கிராசேவையாளர் அலுவலகம் புணரமைப்பு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும். மணிப்புரத்திற்கான பயணிகள் பஸ் தரிப்பு நிலையம்.(நிழல் குடை) வீதிகளுக்கான பெயர்ப்பலகை நீக்கம் மற்றும் கா.பொ. சாதாரணதரப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிப்பும் சேவை நலன் பாராட்டு விழா என்பன இன்று (18.06.2015) காலை 9.30மணிக்கு பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவிப்பிரதேச செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிசோர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிசோர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர். வசந்த விக்கிரமசிங்க, திரு.வே.சுரேந்திரன் (நற்பணிமன்றம் வவுனியா) எம்.கே.ஆரிப், எம் எஸ்.அப்துல்பாரி மற்றும் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-பாஸ்கரன் கதீஷன்-

1 3 4 5 6