யாழில் மாணவிகளை புகைப்படம் எடுத்த இருவர் கைது!!

547

Photo

யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மாணவிகளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுகளுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தரோடைப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்பாக நின்று மாணவிகளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் சிவில் உடையில் சென்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.