
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை இரண்டு கட்டங்களாக நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட பரீட்சை ஓகஸ்ட் 4ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 13ம் திகதியும் இரண்டாம் கட்டம் ஓகஸ்ட் 24ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8ம் திகதிவரையும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளதால் பரீட்சைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.





