பொது மன்னிப்பின் கீழ் 3000 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!

1116

soudiசவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விசா காலாவதியாகி சவுதியில் தங்கியுள்ளவர்கள் சவுதியின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குச் சென்று தங்களை பதிவு செய்து தண்டனை இன்றி நாடு திரும்ப முடியும் என பொது மன்னிப்பு காலம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பும் இலங்கை பணியாளர்கள் மீண்டும் சவுதிக்கு தொழில் புரிய செல்ல முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரசியன் பொது மன்னிப்பு காலம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் நவம்பர் 4ம் திகதிவரை அமுலில் இருக்கும்.