கொழும்பில் இருந்து தங்கம் கடத்திச் சென்ற நால்வர் கைது..!

553

goldசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து வரும் விமானத்தில் தங்க பிஸ்கட்டுகளை கடத்திக் கொண்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளை யாரையும் இறக்க விடாமல் விமானத்திற்குள் சோதனை செய்தனர்.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பார்வதி (48), அமராவதி (62), சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயமணி (57) ஆகியோரையும், இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த ஜெயசங்கர் (53) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் கீழே இறக்கி சுங்க இலாகா அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாகவே பேசியதால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை போட்ட போது 20க்கும் மேற்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு இந்திய ரூ. 70 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதையடுத்து 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தி.நகரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு மேல் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.