
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 கிலோகிராம் எடைக் கொண்ட குறித்த கேரளா கஞ்சா, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு கடத்தப்படவிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் கொழும்பைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.





