வெளிநாட்டு வேலைக்கு செல்லத் தயாராகும் பெண்களின் குடும்ப பின்னணி குறித்து தகவல் திரட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலகங்கள் ஊடாக குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடு செல்வதை தடை செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை இன்று தொடக்கம் குறுந்தகவல் மூலம் அவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.