வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் : ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில்!!(படங்கள், காணொளி)

1408

வவுனியா கண்டி வீதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில் இன்று(09.07.2015) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கண்டி வீதியில் பயணித்த வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. விபத்துக்குள்ளாகிய மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகளில் இரு பிள்ளைகளுக்கு காயம் ஏற்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

10410596_907712429296461_815667229783585693_n 11061169_907712625963108_3677190540078236162_n 11229755_907712729296431_6460679552192437795_n OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA