வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (10.07.2015) காலை 9.30 மணி முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் இதுவரை நான்கு கட்சிகள், ஒரு சுயேட்சைக் குழு உட்பட ஜந்து கட்சிகள் தங்களது நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.
உபாலி சமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி கட்சியினர், சந்திரகுமார் கபிலன் தலைமையிலான முன்னிலை சோஷலிச கட்சியினர், கு.திலீபன் தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர், மற்றும் ஒரு சுயேச்சை குழுவினர்களே இது வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அத்தோடு கடந்த 06.07.2015 அன்று சந்தான குமார தலமையிலான ஜனசத பெறமுன கட்சியினர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். மேலும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கூட்டமைப்பினர் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா மாவட்ட செயலகத்தைச் சூழ பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித்தடைகள் போடப்பட்டு வாகனங்கள் மாற்று வழியினூடாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-பிராந்திய செய்தியாளர்-






