வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப் போட்டிகளின் இறுதிக்கட்ட நிகழ்வு – 2015!!(படங்கள்)

637

வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (13.07.2015) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக த.குருகுலராஜா (கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு -வடமாகாண சபை) வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வடமாகாண பாடசாலைகளின் அதிபர்கள், தேசிய கல்வியக் கல்லூரி பிடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் தலைமையுரையை திரு.செ.உதயகுமார் ( மாகாணக் கல்விப் பணிப்பாளர் -வடமாகாணம்) வழங்கிவைத்தார். தொடர்ந்து மாகாணமட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்களும் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

இப் போட்டிகள் 09,10,11,12,13 ஆகிய திகதிகளில் ஆகிய ஐந்து பிரிவுகளாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்றது .

இப் போட்டியில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகள் மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-

P1170682 P1170683 P1170684 P1170687 P1170692 P1170694 P1170695 P1170696 P1170697 P1170699 P1170701