வவுனியா தோணிக்கல் சிவாலயா முன்பள்ளிக்கு தனது 2015ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையின் கீழ் ரூபா 30000 ரூபாவுக்கான இரண்டு துவிச்சக்கரவண்டிகளை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று (16.07.2015) சிவாலயா முன்பள்ளியில் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் தோணிக்கல் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், முன்பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இம் முன்பள்ளிக்கு குடிநீர்குழாய் அமைப்பதற்கு தனது நிதியில் இருந்து 25000 ரூபா ஒதுக்கி இருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.






