தமிழர் பண்டிகையாம் ஆடிப்பிறப்பு கொண்டாட்டமானது இன்று 17.07.2015 வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பணிப்பிலும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா பிரதேச கலை ஆர்வலர்களின் பங்களிப்பில் தமிழர்களின் சிறப்புமிகு பண்டிகையான ஆடிப்பிறப்பினை முன்னிட்டு “ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக்கொண்டாடி குதுகலிப்போம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயலகத்தால் இன்று நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தர்மலிங்கம் வீதிச்சந்தியிலுள்ள நவாலியூர் சோமசுந்தர புலவரின் உருவச்சிலைக்கு காலை 8.30 மணியளவில் மலர்மாலை அணிவித்து நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆடிக்கூழ் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.
இன் நிகழ்வில் வவுனியா பிரதேச பாடசாலை மாணவர்கள் மத்தியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, குழுப்பாடல்போட்டி, தனிநபர்பாடல், கவிதைப்பாடல் போன்ற போட்டிகளை நடாத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-







