வவுனியா பொலிசாரினால் சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி கைது!!

579

Kaithi

அனுராதபுர சிறையிலிருந்து 25.06.2015 அன்று தப்பியோடிய கைதி வவுனியா பொலிசாரினால் இன்று வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது..

பல திருட்டுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த வவுனியா கற்குழியைச் சேர்ந்த ஜெயராசா தர்சன் என்பவரே குற்றவாளியின் வீட்டிலிருந்து இன்று அதிகாலை வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-