
டெல்லியில் பாலியல் புகார் தெரிவித்த 19 வயது மாணவி, இரண்டு இளைஞர்களால் 35 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஆனந்த் பார்பாத் பகுதியை சேர்ந்த மாணவி மீனாட்சி கடந்த வியாழக்கிழமை அன்று இரவு வீட்டுக்கு திரும்பிய போது, 2 வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
மாணவி தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்தும் அவர்கள் அவரை விடவில்லை.
இந்நிலையில், அந்த மாணவியை கத்தியால் 35 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்றுவந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது வாலிபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.
கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 2013ம் ஆண்டு தன்னை கேலி செய்ததாக, காவல்துறையில் அவர்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த புகாரின் பெயரில் கேலிசெய்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





