நேற்று (24.07.2015) வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
பிரேம ராதிகா என்ற 4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான வயது 25 குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இறுதியாக இவர் கட்டாரில் இருக்கும் கணவரிடம் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவரது 4 வயது மகன் தாய் தூக்கில் தொங்கியிருந்ததைக் கண்டு அயல் வீட்டாரிடம் எனது அம்மா ஊஞ்சல் ஆடுவதாக தெரிவித்துள்ளான்.
இதனை அடுத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ப.உதயராசா மற்றும் அகில இலங்கை தமிழர் மகா சபையின் முதன்மை வேட்பாளர் இராசதுரை செல்வராணி ஆகியோர் வருகைதந்து பெண்ணின் வீட்டாரிடம் துயர் பகிர்ந்துகொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-






