வன்னி தேர்தல் தொகுதியில் 334 வாக்களிப்பு நிலையங்கள் : பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம். நபீல்!!

1123

northern_map

வன்னி தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 334 வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம். நபீல் தெரிவித்தார்.

தேர்தல் ஒழுங்கமைப்புகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு தொவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் 109705 வாக்காளர்களும் மன்னாரில் 79433 வாக்காளர்களும் முல்லைத்தீவில் 63920 வாக்களார்களும் வாக்களிக்க உள்ளனர்.

அவர்களுக்காக வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையமும் மன்னாரில் 70 வாக்களிப்பு நிலையமும் முல்லைத்தீவில் 130 வாக்களிப்பு நிலையமும் அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை 2670 பேர் தபால் மூலமாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் வன்னி தேர்தல் தொகுதியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 253058 பேர் வாக்களிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.