கலாமின் உடலுக்கு மக்கள் அஞ்சலி : பேக்கரும்பில் நாளை நல்லடக்கம்!!

540

Kalammmm

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 1.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறுதி சடங்கு நடப்பதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

தற்போது இராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் இடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, இராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு,

அப்துல் கலாமின் இறுதி சடங்கில் பங்கேற்க நாளை காலை 10.3க்கு இராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்தார்.