வவுனியா நெற் அனுசரணையுடன் ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீடு!!

1174

11831674_392236130969708_282614678422860384_n

வவுனியா நெற் அனுசரணையுடன் ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நாளை (31.07.2015) ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

கனவில் உருவெடுத்து ஆடும் நாயகியே என்றபாடல் பாடலாசிரியர் சுப்பிரமணியம் வரதகுமாரின் வரிகளிலும் யோசேப் மனோகரனின் குரலிலும் வெளியிடப்படவுள்ளது. இப் பாடலுக்கு இராயப்பு ஜெயரூபன் இசையமைத்துள்ளார்.

இசை இறுவட்டு வெளியீட்டைத் தொடர்ந்து தமிழ் அருவி த.சிவகுமாரனின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.

-பிராந்திய செய்தியாளர்-