வட, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்ன தவறு? – சிவி.விக்னேஸ்வரன்..!

709

wiki13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள குறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த திருத்தத்தை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள 1,50,000 இராணுவத்தால் மக்களுக்கு அசௌகரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மக்கள் ஒரே மொழியை பயன்படுத்துவதால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் என்ன தவறு என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.



தான் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்து தான் ஓய்வுபெற்று ஓரிரு வருடங்களில் கதைத்தால் எவருக்கும் அதனை விசாரணை செய்ய முடியும்.

ஆனால் ஓய்வு பெற்று 10 வருடங்களின் பின் கதைத்தால் அது என்னை அச்சுறுத்துவதற்காகவே என தான் நினைப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.