எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் : வேட்பாளர் கே.கே.மஸ்தான்!!

509

Masthan

எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று எம்மை விமர்சிப்பவர்கள் தாம் இது வரை காலமும் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். இன்றும் எமது சமூகங்கள் மீள்குடியேற்றத்திலும் அடிப்படை வசதியின்மையிலும் சொல்லனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

தம்மை மக்களுக்கான சேவகனான காட்டி மக்களின் வாக்குகளை பெற்று மக்களை கைவிட்டவர்கள் எமது சொந்த நிதியில் இதுவரை காலமும் இன மத மொழி கடந்து மக்கள் சேவையை செய்த எம்மை விமர்சிக்கின்றனர்.

மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பாங்குடனும் அதற்கு அரசியல் அந்தஸ்தை பெற்று மேலும் எமது மக்கள் சேவையை விஸ்தரிப்பதே எனது நோக்கமே தவிர வெறுமனே கொசமெழுப்பி பிறையோடிப் போன மக்களின் இன்னல்களில் அரசியல் நடத்த நான் வரவில்லை. அதற்கான தேவையும் எனக்கில்லை.

எனவே இம்முறை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியானவாகளை தெரிவு செய்வார்கள். பொய் வாக்குறுதிகளை புறந்தள்ளுவார்கள் என்பது வெளிப்படை என்று தெரிவித்தார்.