
வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை நேற்று (03.08.2015) மதியம் பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா தெரிவிக்கையில்..
தனது ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சமூகமளித்த பொலிசார் குறித்த வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டுக் கேட்டதுடன் வேட்பாளரின் ஆதரவாளர்களிடமிருந்த துண்டுப் பிரசுரங்களை பறிமுதல் செய்ததுடன் ஆதரவாளர்களை கைது செய்ய முயற்சித்ததாகவும் வேட்பாளர் சம்பவ இடத்திற்கு சென்றதையடுத்து பொலிசார் அவ்விடத்தை விட்டு சென்றதாகவும் தெரிவித்த அவர் சில அரசுசார்பு வேட்பாளர்களின் அருவருடிகளாக பொலிசார் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேற்படி சம்பவம் குறித்து வவுனியா பொலிசாரிடம் கேட்டபோது வேட்பாளர்கள் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்கத் தடை இல்லையென தெரிவித்த அவர்கள் போஸ்டர்கள் ஒட்டுவது மாத்திரமே தண்டனைக்குரிய குற்றமென தெரிவித்தனர்.
-பிராந்திய செய்தியாளர்-





