வவுனியாவில் தற்பொழுது தேர்தல் சுவரொட்டிகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுவருகின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கான விடயங்களை மேற்கொள்ளலாகாது எனத் தேர்தல் ஆணையாளரினால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தேர்தல் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுக் காணப்படுகின்றது.
எனினும் பொலிஸார் சுவரொட்டிகளை உடனுக்குடன் அகற்றிய போதிலும் தொடர்ச்சியாக சுவரொட்களை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஒட்டியவண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று விசேட திட்டமொன்றினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிராந்திய செய்தியாளர்-






