நீர்கொழும்பு மீனவர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் தஞ்சம்..!

368

ramesமீன்பிடி படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சிங்கள மீனவர்கள் இருவர் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கை நீர்கொழும்புவை சேர்ந்த வர்ணகுல ஜெயபுஷ்பகுமார், 52, வர்ணகுல ஜெலஸ்டின் ஜினோமணி, 34 என்ற இரு மீனவர்களே தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று (21) மாலை, மன்னார் கடற்கரையில் இருந்து, பைப்பர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க புறப்பட்டு, இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த போது படகில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனே, அங்கு மீன்பிடித்த, இராமேஸ்வரம் நாட்டுபடகு மீனவர் உதவியுடன் ராமநாதசுவாமி கோயில் கோபுர மின்விளக்கு வெளிச்சத்தில், இரவு 8.30 மணிக்கு, அக்னி தீர்த்த கடற்கரையில், தஞ்சம் அடைந்தனர்.

மீனவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததால், படகை திருடி வந்திருப்பார்களா குற்ற வழக்கில் இருந்து தப்பிக்க இங்கு வந்திருப்பார்களா என பொலிசார் விசாரணை நடத்தினார்.

ஜெலஸ்டின் ஜினோமணி கூறியதாவது: ஒரு வருடமாக மன்னார் கடற்கரையில் தங்கி மீன்பிடித்து வருகிறோம்.

நேற்று இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மன்னார் கரைக்கு திரும்ப முடியாமல் தமிழக நாட்டுபடகு மீனவர் உதவியுடன் இராமேஸ்வரம் கரைக்கு வந்தோம் என்றார்.