வடகொரிய இராணும் போருக்குத் தயார் நிலையில்!!

348

Korea

தென்கொரியாவுடன் போருக்குத் தயாராகுமாறு வட கொரிய இராணுவத்துக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கிம் ஜாங் உண்ணின் உத்தரவை அடுத்து, வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தொடர்பான அவசரக்கூட்டத்தில் தென் கொரியா எல்லைப் பகுதியில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இராணுவத்தினர் எந்த நேரத்திலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் அவதூறு பரப்பும் வகையிலான தகவல் ஒலிபரப்பை தென் கொரியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வட கொரியா எச்சரித்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகள் இடையே உள்ள படையில்லாப்பிராந்தியப் பகுதியில் வட கொரியா நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இதனை அடுத்து தென்கொரியாவும் ஆயுதத்தாக்குதலை முன்னெடுத்தது.

இதைத்தொடர்ந்து எல்லையோரத்தில் வசிக்கும் மக்களை இருநாடுகளும் வெளியேற்றி வருகிறது.