
9 வயதுச் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 17 வயது மாணவனை திருவனந்தபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்சம் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
9 வயது சிறுவனை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தபோது, அச்சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளான்.
அதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவன், அவன் தலையில் பாட்டிலால் அடித்து அவனைக் கொலை செய்துள்ளான்.
தலையில் பலத்த காயமடைந்த அச்சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர் இறந்த சிறுவனின் சடலத்துடன் அம்மாணவன் உறவு கொண்டுள்ளான்.
சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரணத்திற்குப் பின்னர் அச்சிறுவன் பாலியல் வன்முறைக்கு ஆளானதைக் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள 17 வயது மாணவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





