பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி இன்று..!

466

uniஇவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

எந்தவொரு காரணத்திற்காகவும் இன்றை நாளின் பின்னர் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.