மற்றுமொரு அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது: பலர் பலி (வீடியோ இணைப்பு)

557

அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவில் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு விபத்து குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் நேற்று மாலை அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 200ற்கும் அதிகமான அகதிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில் 150 பேர்வரை இலங்கை அகதிகள் என கூறப்பட்டுள்ளது.

படகில் பயணித்த 25ற்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் 30ற்கும் மேற்பட்ட இந்தோனேசிய மீனவர்களது படகுகள் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் நீந்தி கரை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மூழ்கிய படகு பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்பு பணிகள் தொடங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகு விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தையின் சடலம் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படகில் இருந்த 61 ஈரானியர்களில் சொஹேல் என்ற நபர் மாத்திரம் நீந்தி கரையை எட்டியுள்ளார்.

படகின் மோட்டார் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் படகு கவிழ்ந்ததாக உயிர்தப்பிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

கடலின் சீற்றம் அதிகரித்தமையினால் இந்நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

படகின் கெப்டன் சிறிய படகொன்றில் ஏறி தப்பித்து விட்டதாக சொஹேரெல் குறிப்பிட்டுள்ளார்.