
வவுனியா மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சாள்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.
45 அணிகள் பங்குபற்றிய இத் தொடரில் இறுதிப் போட்டிக்கு சாள்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் என்பன தகுதிபெற்றன.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாள்ஸ் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகாநந்தா விளையாட்டுக்கழகம் 54 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
சாள்ஸ் விளையாட்டுக் கழகம் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இக் கோப்பையை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.





