வவுனியாவில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு சாரணர்களின் இரத்ததான முகாம்.!!(படங்கள்)

869

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரணர் குழுவும் இணைந்து சமாதான தினத்தையொட்டி நடாத்திய இரத்ததான முகாம் நேற்று முன்தினம் (20.09.2015) காலை 9.00 மணிமுதல் 12.30 மணிவரை வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் முகாமில் சாரணர்களுடன் பொது மக்களும் உயிர் காக்கும் தானத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டதுடன், வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரணர் குழுவும் இணைந்து நடாத்தும் 10 ஆவது இரத்ததான முகாம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொடராக 6 மாத காலப்பகுதிக்கு ஒருதடவை இவ் முகாமை வவுனியாவில் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இளைஞர்கள் தங்களின் கிராமங்களில் இவ்வாறான நிகழ்வை ஒழுங்கு செய்து மகத்தான சமூக பணியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளரும், உதவி மாவட்ட ஆணையாளருமான திரு சு.காண்டீபன் கேட்டுக்கொண்டார்.

 11215722_754844171309374_1072132831656306435_n 12002076_754843961309395_4357860680526817972_n 12002218_754843467976111_3695513566561995034_n 12002287_754846774642447_4299657974878130755_n 12002818_754844294642695_3080282430723066566_n 12006313_754848017975656_8783409754698205235_n 12006345_754844367976021_2175961833724463185_n 12032054_754846687975789_385231235667292450_n 12036671_754848951308896_3978790889032175153_n 12036919_754843177976140_719676736411335343_n 12038249_754843531309438_5973217594013191277_n 12039408_754844887975969_8478142626890374277_n 12039657_754843011309490_5580668657348214345_n 12042920_754843334642791_8155709428638916373_n 12043027_754843311309460_5105918191750354064_n 12047127_754843487976109_6823556662168123934_n 12047133_754844571309334_6489457172062614004_n