புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வன்னியின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸ்ஸநாயக்கா உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, குடாகச்சகொடி பிரதேசத்தில் பாரிய இயந்திரங்களின் உதவியுடன் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர் உள்ளிட்ட பலர் கைது செய்த நிலையில் அவர்களுக்கும் அப்போதைய வன்னிப் பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வவுனியா, மன்னார் பிராந்திய முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரையும் ஏனைய சந்தேக நபர்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் ஆயர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.






