இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு சிறுமிகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இரண்டரை வயது மற்றும் 5 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு டெல்லியின் நங்கோலி பகுதியில், வசித்து வந்த இரண்டரை வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இரண்டு பேர், பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இதேபோல் கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் கடத்திச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.