15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

837

1_115 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை – ஆராச்சிகந்த பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கான்ஸ்டபிலான இவர் 15 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதோடு, அதில் 10 இலட்சத்தை பெற்றுக் கொள்ள முற்பட்ட போதே கைதாகியுள்ளார்.

2013ம் ஆண்டு 10 கிராம் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு சாதகமாக சாட்சியளிக்கவே குறித்த கான்ஸ்டபில் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.