வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!!

879

Train

வடக்கு ரயில் சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.

தம்புத்தேகம மற்றும் சேனரத்கம பகுதியில் ரஜரட்ட ரெஜீன ரயில் நேற்று காலை தடம்புரண்டதில் வடக்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் நேற்று இரவு வடக்கு ரயில் பாதையில் பயணிக்கவிருந்த நான்கு ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டையில் இருந்து 08.30க்கு காங்கேசன்துறை நோக்கி செல்லவிருந்த ரயில், 07.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட இருந்த ரயில் மற்றும் இரவு 09.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி செல்லவிருந்த ரயில் போன்றனவே இவ்வாறு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.