இந்திய சுற்றுலா வீசாவிற்கான கட்டணம் குறைப்பு!!

498

VIsa

இந்தியாவிற்கான சுற்றுலா வீசாவிற்கு இணையத்தளம் (e-Tourist Visa) ஊடாக விண்ணப்பிக்கும் இலங்கையருக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தினூடாக இந்திய சுற்றுலா வீசாவிற்கான கட்டணமாக இதுவரை 60 டொலர்களும், வங்கிச் சேவைக்காக மேலதிகமாக 2 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தன.

எனினும் தற்போது அந்த கட்டணம் 14 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதோடு, வங்கிச் சேவைக்கான மேலதிக கட்டணமாக 2.5 டொலர்கள் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமென இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எனினும் ஏனைய வீசா கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.