தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!!

792

Kaithikal

இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இதன்அடிப்படையில் கடந்த 9 நாட்களாக தாம் மேற்கொண்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

எனினும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரையில் தமக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படாதுபோனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அறிவித்தலை சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்கக்கோரி 263 அரசியல் கைதிகள் 14 சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டம் நேற்று சிறைச்சாலைகள் அமைச்சர் டி எம் சுவாமிநாதனினால், அரசியல் கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.