வவுனியாவில் நடைபெற்ற முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் சக்கரநாற்காலி கூடைப் பந்தாட்டப் போட்டி!!

558

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்டப் போட்டி வவுனியா நகர சபை மைதானத்தில் இன்று(30.11.2015) இடம்பெற்றது.

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர் அமைப்பான ‘உயிரிழை’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோர் பங்குபற்றினர்.

எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

அணிக்கு 6 பேர் கொண்டதாக 3 அணிக்களுக்கிடையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா நகரசபைச் செயலாளர் தர்மேந்திரா, சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வைத்தியர் சுதாகரன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

1 2 3 4