சற்று முன் வவுனியா சூசைப்பிள்ளையார்குள வீதியில் தீடீர் என மோட்டார் வண்டி ஒன்று தீப்பற்றியது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியா சூசைப்பிள்ளையார்குள வீதியில் மோட்டார் வண்டி ஒன்றை, மோட்டார் வண்டி திருத்துனர் பரீட்சிப்பதற்காக செலுத்திச் சென்றபோது மோட்டார் வண்டியில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதுடன் மோட்டார் வண்டி ஓட்டுனருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.






