வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் சாதாரணதரம் கற்க்கும் செல்வி அ.லக்சா என்ற ஏழை மாணவிக்கு ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.சு.திருஞானசம்மந்தமூர்த்தி தமிழ் விருட்சத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக துவிசக்கர வண்டியும், மாதாந்த உதவித் தொகையும் கனடாவில் வசிக்கும் ஜனனி மணிவண்ணன் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டது.
நவ்வி பாலமோட்டையில் வசிக்கும் இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்த தந்தை அரியரத்தினம், பாரிசவாத நோயால் பாதிக்க பட்ட தாய் விமலேஸ்வரி உடன் ஒரு தம்பி, ஒரு தங்கை என ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் லக்சா படிக்க வேண்டும் என்ற தன் நம்பிக்கையில் பல சிரமங்களுக்கு மத்தியில் சுமார் 18 கிலோ மீட்டர் பஸ்சிலும், நடந்து வந்தும் கற்றுவந்த நிலையில் அவரது நிலையை அதிபர் தமிழ் விருட்சத்துக்கு கொண்டு வந்த நிலையில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன .
ஜனனி மணிவண்ணனின் இந்த உதவியை அதிபர் திரு.சு .திருஞானசம்மந்தமூர்த்தி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆசிரியை திருமதி உ.சுகந்தி ஆகியோர் கல்லூரியில் வைத்து வழங்கி வைத்தனர்.






