வெள்ளத்தில் மிதக்கும் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது : அனைத்து விமானங்களும் ரத்து!!

646

சென்னையில் இடைவிடாது பெய்த கன மழையால் விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் வெள்ளமாக தேங்கியுள்ளது.

இதனால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் நேற்று இரவு முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று இயக்கப்பட இருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்றழுத்த தாழ்வுநிலையால் திங்கட்கிழமை பிற்பகல் முதல் சென்னையில் விடாமல் கனமழை கொட்டியது. 40 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

மோசமான வானிலையால், விமானங்கள் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு தரை இறங்குவதற்காக வந்த 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டன.

மேலும் விமான நிலையத்திற்குள் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும் ஓடு பாதையிலும் வெள்ளமாக தேங்கியிருந்த மழை நீரால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

4 5 6 7