ஒலுமடு வேலடி கிராமத்தில் மக்கள் குடியிருப்பு மீது அழிவினை ஏற்படுத்தி விட்டு காட்டுப்பகுதியினை நோக்கி செல்கின்ற போது இவ் இரண்டு யானைகளும் குழிக்குள் வீழ்ந்துள்ளன.
இவ்வாறு வீழ்ந்த யானைகளை இனங்கன்ட மக்கள் நெடுங்கேணி பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து விரைந்து செயற்பட்ட வனஜீவராசிகள் அலுவலகர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு யானைகள் இரண்டையும் மீட்டனர்.






