சர்வதேச விசேட தேவையுடையோர் தின விழா- 2015 இன்று(03.12.2015) வவுனியாவில் நடைபெற்று வருகின்றது
இதன் முதல் நிகழ்வாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒமந்தை மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான சக்கர நாற்சக்கர ஒட்டம் காலை 7.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை வந்தடைந்தது.
இதில் விசேட தேவையுடைய பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இன் நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.






